உன் அருமை

காலையிலே அந்தி மாலையிலே
களைப் படையும் வேளையிலே
உணர்வேன் உன்தன் உன்னதத்தை
வாக்குவாதத்தில் கலந்துரையாடலில்
நண்பர்களுடன் கொள்ளும் சிறுசந்திப்பில்
அறிவேன் உன்தன் அருமையை.

இரவினிலே கண்விழித்து படித்திட
உதவி செய்தாய். குளிர்காலத்தில்
என்தன் குளிரை குறைத்தாய்.
மணித்துளி வரை நீடிக்கும்
உன்னுடன் கொண்ட உறவின்
இனிமை என் நெஞ்சியினிலே.

சிக்கன விருந்தும் உன்பெயரால்
தான் விளிக்கப் படுகின்றன.
ஓ. . . எத்தனை எத்தனை
வகையில் எடுத்துரைக்கலாம்
உன்னை, நித்தமும் நான்
சுவைத்து அருந்தும் தேநீரே.

எழுதியவர் : செல்வா (23-Dec-15, 1:19 am)
Tanglish : un arumai
பார்வை : 69

மேலே