வசந்த காலங்கள்

வாழ்ந்த கால வசந்த காலங்கள்
வலிய வந்து வருட
தேய்ந்த சில நினைவுகள்
தெள்ள தெரியும் முழு நிலவாய்
மெல்ல தூண்டும் புரியா உணர்வுகள்
சொல்ல முடியா தவிப்புக்கள்
செல்ல நினைக்கும் அதன் இடம்

காலம் ஒரு சக்கரம் அது சுழலும்
ஓடிக்கொண்டுத்தான் இருக்கும் அது
ஓடும் காலத்தில் உள்ள மனவோட்டமும்
மாறும் மனங்களும் மீண்டு வாரா
மீண்டும் வாரா
காரணம் காலம் ஒரு வட்டமல்ல
கடந்த காலம் கடந்தவையே
செல்ல முடியா இடம்
சென்றாலும் வெல்ல இயலா மனம்
நீந்தும் நினைவில் மட்டும்
வசந்தங்கள் மட்டுமல்ல
வாழ்ந்த கால எல்லா நினைவுகள்


- செல்வா

எழுதியவர் : செல்வா (23-Dec-15, 1:17 am)
Tanglish : vasant kaalangal
பார்வை : 88

மேலே