திருவாளர்கச்சிதம்
நம்ம கதையோட நாயகனுக்கு அவரோட பெற்றோர் வச்ச பேரு ஏதோ ஒன்னு
ஆனா நான் வச்ச பேரு திருவாளர்.கச்சிதம் (mr.perfect). எல்லா விஷயத்துலயும் தன்ன ரொம்ப பெர்பெக்ட் ன்னு நெனச்சுப்ப்பார்.
அவரு நாகர்கோவில உள்ள ஒரு கிராமத்துல ஒரு நடுத்தர குடும்பத்துல பொறந்து ஒரு தனியார் இன்ஜினியரிங் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு சொந்தகாரங்க தயவுல ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனில சிஸ்டம் என்ஜிநியரா நம்ம சென்னைல வேலை பாக்குராப்புல. சென்னைல இருக்குற மத்த மாவட்ட காரங்க எல்லாதுக்கும் தீவாளி பொங்கல்னா பாதி சந்தோசம் தான் ஏன்னா சொந்தவூருக்கு போயிட்டு திரும்ப ஆபீஸ் வர்றதுக்குள்ள போதும் போதும் ஆயிடும் இதுலயும் சாகசம் பண்ணி ரொம்ப அனாயசமா முன்பதிவு இல்லாத பஸ்ல போயிட்டு வர்றவங்களும் இருக்காங்க ஆனா நம்ம ஹீரோ அவ்ளோ சமர்த்தன் இல்ல. அன்னிக்கு மறுநாள் தீவாளி ஊருக்கு போணும் ஆனா டிக்கெட் முன்பதிவு பண்ணல, நம்ம ஹீரோ ஒரு பாலிசி வச்சிருக்கிறாரு, அது ஒன்னும் பெரிய கம்ப சித்திரம் இல்ல சென்னைல இருந்து திருச்சி , திருச்சில இருந்து மதுர அப்புரம் நெல்லை கடைசியா நாகர்கோயில் இப்பிடி ஒவ்வொரு பஸ்ஸா மாறி மாறி போகணும் அவ்ளோதான் அவரும் அப்டித்தான் சென்னைல இருந்து மதுர வர வந்துடாரு நம்ம கதையோட சீன் மதுர மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டுல தான் நடக்குது. அரக்க பறக்க ஒரு ஹோட்டல்ல வேகமா சாப்பிட்டுட்டு அவரு அடுத்து வரபோற பஸ்க்கு காத்திருக்குற பல ஜெனங்களோடு அவரும் போய் நின்னாரு அதுக்கு முன்னால அவர நான் ஏன் கச்சிதம்னு சொன்னேன்னு ஒரு உதாரணத்தோடு சொல்றேன், அது வேற ஒன்னும் இல்ல யாராவது அவருட்ட பிச்ச கேட்ட போடமாட்டாரு அதுக்கு காரணம் கஞ்சத்தனம் ஆனா பாத்திரம் அறிந்து பிச்ச போடு ன்னு பெரியவா சொல்லிருக்கா ன்னு ஒரு பழ மொழி சொல்லி சமாளிசிடுவாறு. இப்பிடி குளிக்காததுக்கு, ஆபீஸ்ல வொர்க் பெண்டிங் போடறது ன்னு ஒவ்வொன்னுக்கும் லாஜிக் சொல்லி தப்பிசிடுவாரு உண்மைல மத்தவங்களுக்கு அவரு perfect இல்ல ஆனா அவரு தன்ன பெர்பெக்ட்ன்னு நெனச்சுப்பாரு இப்போ சம்பவத்துக்கு வருவோம் ஒருவழியா நெல்லை பஸ்ல ஏறிட்டாரு ஜன்னல் ஒர சீட் கிடைச்சாலும் ரொம்ப சந்தோஷ படமுடியல ஏன்னா அவர் இருந்த சீட்டுக்கு கீழ வீல் இருந்த தால ரொம்ப கம்போர்ட்டா இருக்க முடியல ஏதோ ஓகே உட்கார்ந்துட்டார். கண்டக்டர் வந்தார் நம்ம ஹீரோவும் ஜெண்டிலா டிக்கெட் போட்டாப்புல,கொஞ்ச நேரத்துல்ல சன்னல்ல தலைய சாய்ச்சு அப்டியே பஸ் ஸ்டாண்ட நோட்டம் விட்டாரு, ஒரு 80 இல்ல 85 வயசு இருக்கும் ஒருபாட்டிம்மா பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டவங்க போலதான் இருந்தாங்க பாவம் அவங்களுக்கு சீட் கிடைக்கல, நம்ம கச்சிதம் இருக்குற சீட் பக்கத்துல தான் நின்னுட்டு இருந்தாங்க, நம்ம ஹீரோவுக்கு அந்த பாட்டிக்கு சீட் தர மனசு இல்லதான் ஒருவேள அவங்க கேட்ட என்ன சொல்ல ஆஅம் பாட்டி இங்க வீல்
இருக்குது உங்களாலே சௌரியமா இருக்கமுடியதுன்னு சொல்லிக்கலாம்னு ஒரு பிளான் போட்டு மனசுக்குள்ளே பிரிண்ட் போட்டு அவரு முடிகிரதுக்குள்ள தளர்ந்த தொனியில் ராசா என்று கைய நீட்டினாங்க அந்த பாட்டி நம்ம திருவாளர் கச்சிதம் அவங்கள பார்த்தாரு மறுபடி அந்த பாட்டி தன் கைய நீட்டி பைசாப்பான்னு சொன்னங்க நம்ம கச்சிதம் சில்லர இல்லன்னு பட்டுன்னு சொல்லிட்டாரு, ஆனா அந்த பாட்டி திரும்பவும் கைய நீட்டி இல்ல ராசா ஜன்னல் ஓரம் இருக்கே உன் மேல் சட்டை பையில இருக்குற பைசா வெளில வந்து இருக்குது காத்து அடிச்சா பறந்து போய்டும் அதான் சொன்னேன்பா எனக்கு காசு வேணாம்பா ன்னு சொன்னங்க நம்ம கச்சிதம் வாயாடச்சு போய்ட்டாபுல

