மார்கழி

மார்கழி மாதத்தில் வண்டுகள்
மலர்களைத் தேடி வருவதில்லை
மலரினில் சேர்ந்திடும் பனியினால்
மலரும் தேனைத் தருவதில்லை

பனியும் அதிகம் பெய்வதாலே
பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை
பெண்களும் பூக்களை நினைத்தே
பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை

பனியில் தேனிகள் வருவதில்லை
பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை
அதிகப் பனியால் ஆண்களுக்கும்
அதற்கும் இப்போ விருப்பமில்லை

ஆக்கல் குறைந்த காரணத்தால்
அழித்தலை ஆண்டவன் செய்வதால்
அதனால் மக்களில் பலபேர்
ஆலயம் செல்வதே உண்மை

வருடக் கடைசி உனக்கும்
வரவு செலவு உள்ளதோ?
ஏனிந்த வேதனை இறைவா!
இதுவும் உனது செயலா?

எழுதியவர் : (25-Dec-15, 1:29 pm)
Tanglish : margali
பார்வை : 1095

மேலே