பிரிவு

மாலை பொழுதில் ஈர தென்றல் என் மார்பை தழுவி
என் மனதில் உள்ள உன் நினைவை எழுப்பி
கண்ணில் ஓடுகிறது கண்ணீர் தழும்பி

காற்றில் பறக்கும் மேலாடை உன் கை தடுப்பது போன்ற நினைவு
ஈரத்தை இழந்த என் இதழ்கள் நனைந்தது போல ஓர் உணர்வு
நான் கவலையில் சாயும் சுவர் உன் தோழ்கள் என்று ஓர் கனவு

உன் வாசனை என்னை கடந்த போது
என் உணர்ச்சிகள் எழும்பி
தவிர்க்க முடியாமல் தழும்பி
என் உடல் சிலிர்த்தது

எழுதியவர் : கார்த்திகா (25-Dec-15, 4:17 pm)
Tanglish : pirivu
பார்வை : 394

மேலே