நிரந்தரமாகவே என்னில் - வலி
என் வார்த்தை கடல்
அலையின்றி
அமைதியாகவே....
ஒரு வரி கூட எழுதிட
ஒத்துழைக்காமல்
என் மொழி கூட
மௌனமாகி...
எல்லாமே வெறுமையாக ...
அண்டவெளியே இருளாக...
உணர்வுகள் எனக்குள்
மாித்துப்போனதாகவே
இதய ஓசை கூட
வேலை நிறுத்தம்...
சிந்தனைக்குள் இன்று
எதுவும் சிக்கவில்லை
சிந்தை கூட என்னில்
சிறை வாசம்...
அழகான ஓர் நந்தவனம்
வாவென்று அழைக்கையிலே
அதன் வாசற்படி நின்று
யாருக்கும் தெரியாமலே
வாசனை முகர்ந்திடும்
கொடுப்பினை மட்டுமே எனக்கு ..
ஊமை இதயத்திற்கான
நரம்புகள் வழியில்
மறந்திட முடியா ஒரு வேதனை..
உயிரின் எங்கோ
ஒரு மூலையில்
மருந்திட முடியாத ஓர் வலி,
நிரந்தரமாகவே என்னில்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
