இதயமே என் இதயமே

இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோல நானும் இல்லையே
உன் விழிகள் தான் உன்னாயுதம் -எனைக்
காணாத போதும் கொல்கின்றாயே
என் கயல் விழியும் உன் விரல் நுனியும் -நமைத்
தொடுகின்ற வேளை என் கனவுகளே
உன் அருகினிலே நானும் வருகிறேன்
வரும்போதெல்லாம் எனை வெறுக்கின்றாய்-நீ
வெறுப்பதால் கொஞ்சம் தவிக்கிறேன் - தவிப்பதால்
மீண்டும் உனையே நினைக்கிறேன்
ஒரு முறை நீ பார்த்த பார்வைகள் எல்லாம்
இறைவனின் வரங்களாய் வேண்டுகிறேனே
என் நெஞ்சினில் உறையும் ஸ்பரிசங்கள் யாவும்
நீயாகவே நானும் உணர்கிறேனே
உன் பெயர் தான் என் கவியாய் மாறா
கனவுகள் முழுதும் உன்னுடன் வாழ
தனிமைகள் வாழ்வின் நிலையாக மாற
என்னுயிர் உடனே உன்னுயிரை இணைக்கிறேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

நீ ஓர்...
கவின் சாரலன்
29-Mar-2025

போகுமிடம் வெகு...
Ashok4794
29-Mar-2025
