என் காதல்

தாமரை இலை மேல் நீர்த் துளி போல்
கண்ணில் மட்டும் காண்கின்ற
கானல் நீராய் என்காதல்!

தேடி சென்று காதலித்தேன்..
பாடம் கற்று திரும்பி வந்தேன்!

மீண்டும் காதல் தேடி வர..
கற்ற பாடம் நினைவில் எழ..
ஐயம் கொண்டேன் காதலிக்க!

என் அச்சம் போக்கி, ஆசை காட்டி!
தன் அன்பால் என்னை வென்றுவிட்டால்..
காதல் சொல்லி சாய்த்துவிட்டால்!
நானும் காதல் கொண்டேன் அவளிடத்தில்..

அன்பு வளர்ந்து,
காதல் மலர்ந்து,
உறவு வளர்க்க நினைக்கையிலே..
பிரிவு வந்து விளக்கியதே!!

இது விதியோ? சதியோ? தெரியவில்லை!
நடப்பது ஒன்றும் புரியவில்லை!!

எழுதியவர் : நேதாஜி (25-Dec-15, 8:58 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 276

மேலே