மரம் வளர்ப்போம்
கடலென்றால் அலைவேண்டும்
உடலென்றால் உயிர்வேண்டும்
நாடென்றால் மக்கள்வேண்டும்
காடென்றால் மரம்வேண்டுமன்றோ?
அகில நாடுகள் யாவையும் ஏழையே
மரச்செல்வங்கள் இல்லை என்றால்!
மறவா தண்டனை கொடுத்திட வேண்டும்
இனிமரங்களை எவனா கொன்றால்!
மரங்கள் உலகினைக் காப்பவை மனிதன்
உடல்விடும் மூச்சினை ஏற்பவை
மரங்கள் மழையின் கருவறை மறந்து
அழிப்பவர்க் கில்லை கல்லறை
மரங்களை நாட்டினில் வளர்ப்போம் நம்
மண்ணின் மகிமையைக் காப்போம்........