குடிசையின் கதறல்

மினுக்கிய இடம்
எல்லாம்
உருக்கி வடிக்கின்றது
இருள் சூழ்ந்த
இரத்தம்


பயம் கொண்டு
பாவம் தெரியாது
ஞாபகம் இன்றி
ஓடுகிறேன்
யாரும் அற்ற
தனிமையை நோக்கி


மிதந்து கிடக்கும்
படகாய்
ஒழிந்து கிடக்கின்றது
ஓலை குடிசையின்
கதறல்

இருண்டது எல்லாம்
கருப்பு
எரிந்தது எல்லாம்
உன் குடிசையின்
தவிப்பு

தலை நிமிர்ந்து நடந்தும்
துணையில்லாது
தவிக்கிறோன்
ஒற்றை குடிசையை
இழந்து



கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (27-Dec-15, 5:38 am)
பார்வை : 90

மேலே