இன்னும் என்ன சொல்ல?

திசை படரத்
தென்றலுக்குத் தெரிகிறது
திரியில் எரிய
அகலுக்குத் தெரிகிறது
மொட்டுகளில் விரிய
மலர்களுக்குத் தெரிகிறது
கீழ் நோக்கி இறக்கை அடிக்க
வானப் பறவைக்கு
முன்னமே தெரிந்திருக்கிறது
பச்சை நிறமே பரவ
இலைகளுக்கும்
இயல்பிலேயே தெரிந்திருக்கிறது
உதடுகள் குவித்துக் குரைக்க
எதிரி காலை கவ்விப் பிடிக்க
நாய்க் குட்டிக்கும்
தெரிந்திருக்கிறது
துளி விழுந்தால்
உறிஞ்சிக் குடித்து
தேக்கிச் சுரக்க மண்ணுக்கும்
தெரிந்திருக்கிறது
எனக்கு மட்டும் ஏன்
சொல்லாமல்
எதுவும் தெரிவதில்லை...