பேசிவிடு
பேசி விடு
இல்லையெனில்
பேச ஒரு
வழி விடு.....
உன்
பார்வை
படும் பக்கம்
இது என்பதால்
என் துக்கம்
அதை
தூதுவிடுகிறேன்
இங்கே.....
இணை பிரியாத
அன்பை
இந்த இணையத்தின்
இணைப்பில்
இருவரும்
இருதுருவமாய்
இன்றுவரை.....
அல்ல இறுதி
வரை.....
தூது மேல
தூது
விட்டு தூரம்
இன்னும்
துயரமாச்சு.....
துன்பம்
மேலே
துன்பம்
வந்து
இன்பம் எங்கோ
தொலைஞ்சு
போச்சு.....
மௌனமாய்
இருந்தால்
எல்லாமே
மௌனித்துப்
போகும் என்றால்
இந்த
மானிட வாழ்க்கை
மௌனித்தே
போகட்டும்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
