முயற்சி

*********
கிறுக்குப் பயலே. ....
தகர்த்தெறி !
நிகழ்காலத்
தெருக்களில் நட !
பருவத்தை
தவறவிட்டு
பிறகு
நச்சு விதையாய்
முளை கொள்ளாதே
உள்ளத்தைப்
பண்படுத்தி
உலக வீதியில்
உலா வா !
சிறந்த நூல்களை
அசை போடு
சீரழிக்கும்
சமூககிருமிகளை
சீர்திருத்தி
அழித்துக் கொல் !
ஞானத்தின்
தொடக்கத்தை
அலசிப்பார்
விழிப்புணர்வு
கொண்டு
சிந்திக்கத்தொடங்கு
உன்
இரத்த அணுக்களில்
பரவ விடு
அதனோடு
சங்கமித்து நனை !
கணக்கில் அடங்காத
கணணிகளின்
கருத்தலைகள் அல்லவா
உன் மூளைக்குள்
கருக்கொண்டுள்ளன.....
உன்னை
முடுக்கி விடு - அது
விண்ணைத் துளைக்கட்டும் !
மண்ணில்
ஜெயிக்கும்
மானுடன் நீ
மண்ணிற்குள்ளும்
ஒளிர்ந்து கொண்டே
இருப்பாய் .......!
வெல்லப்படாத
முயற்சிகளுக்கு
ஒரு போதும்
தோல்வி என்று
பொருளல்ல. ....................!
- பிரியத்தமிழ் --