கருவறை

மூடிய கருவறைகள் மீண்டும் திறக்கட்டும்
அவன் இன்று விடுப்பு
அவளை நான் இன்று காண
நேற்றைய அவளிடம் நான் செல்வேன்..

யார் கூறியது பெண்களுக்கு மட்டும் தான்
கருவறை உண்டு என்று?
ஆண்களுக்கு மட்டுமே உண்டு
காதல் எனும் குழந்தையை சுமக்கும்
ஒவ்வொரு ஆணின் மனமும்
இல்லை இல்லை கருவறையும்
ஒரு பெண்ணை தானே சுமக்கிறது
பெண்ணையும் சுமக்கும் கருவறை ஆணே..!!!!

எழுதியவர் : உமர் பாரூக் (28-Dec-15, 9:59 am)
Tanglish : karuvarai
பார்வை : 87

மேலே