ஒரு மரம் ஓராயிரம் குழந்தை

ஒரு மரம் ஓராயிரம் குழந்தை
-------------
பச்சை பசேரென இருக்கும் போது .....
கண்ணுக்கு குளிர்மை தருகிறது ....
குடைபோல் படர்ந்து இருக்கும் போது.....
உயிரளுக்கு நிழல் தருகிறது ......
இத்துப்போகும் சருகு தருகிறது
செத்து மடிந்தால் விறகு தருகிறது ....!!!

வாழும் போது பயன் தருகிறது ....
வாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது......
தான் நச்சை எடுத்து (CO2)....
உனக்கு உயிர் (O2) தருகிறது .........!!!

ஒரு மரம் வெட்டப்படும்போது ....
ஒரு மகன் மகள் வெட்டப்படுகிறார்கள் ......
ஒரு மரம் நடப்படும் போது .......
ஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் .....
குழந்தை இல்லையே குழந்தை இல்லையே
என்ற கவலை இல்லையே உலகில் மனிதா ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Dec-15, 7:39 am)
பார்வை : 149

மேலே