ஏலே பித்துக்குளி - புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஏலே பித்துக்குளி!

'ஏன்டா, இது என்னடா
'கந்த சஷ்டி கவசம்? '

"புது வருஷ வாழ்த்துக்கள்! "

' காக்க காக்க
கடவுளே காக்க!
மழையில் மிதக்காத
மயிலையை காக்க!
மதி கொஞ்சம் குடுத்து,
மக்கள் சபையை
காக்க!
நிர்பயாக்கள் இல்லாத
நாட்டை கொடுக்க!

கொடுக்க கொடுக்க
நேர்மயை கொஞ்சம்
நேராக கொடுக்க!
தடுக்க தடுக்க,
செல்பியில் சாகும்
சிறிதுகளை தடுக்க!
காக்க காக்க
மொபைலில் மடியும்
மனிதனை காக்க!

நீக்க ௺க்க
ISIS ஐ
அடியோடு நீக்க!
அழிக்க அழிக்க
லஞ்சம் எனும்
அரக்கனை அழிக்க!
போக்க போக்க
குழியுள்ள பாதைகளை
கூண்டோடு போக்க!

பல ஸ்ருதி :

மாதம்பட்டி மக்களை
கொஞ்சம் மறவாமல்
காக்க!
சிரிப்பும் நட்பும்
சிந்தனையும்
கொடுத்து,
கந்தனை கொஞ்சம்
அப்பப்போ நினைத்து,
சாம்பார் சாதத்தை
சரியாக சமைத்து,
வயசான காலத்தில்
வைத்தியர் யாரும்,
வலுக்கட்டாயமாக,
வராமல் காத்து,
தேங்காய் மட்டைகள்
திடீரென விழாது,
பாம்புகளுக்கு கொஞ்சம்
பகுத்தறிவு புகட்டி,
தெரு நாய்களுக்கு
கொஞ்சம்
தெளிவாகச்சொல்லி,
அயல்நாட்டு குழந்தைகளுக்கு
அறிவுரை அளித்து,
டாலரை தவறாமல்
டிரான்ஸ்பர் செய்து,
மாதம்பட்டி மக்களை
கொஞ்சம் மறவாமல்
காக்க!
வேலும் மயிலும்
விழிப்போடு காக்க "
என்னடா, பித்துக்குளி?"

'ஒன்னு மறந்துட்டே
அதையும் சேத்துடு!
இதை மினிமம்
5 பேருக்காவது
வாட்ச்சப்பிலே
உடனேயே
அனுப்பவில்லை
என்றால்,
பலன் பங்களாதேஷ்க்கு
போயிடும்! '

"ஓகேடா பித்துக்குளி! "

எழுதியவர் : ராஜா ஐயர் (29-Dec-15, 8:44 am)
பார்வை : 85

மேலே