காதல் க கா

கனவுகள் கரைத்து கவி செய்து
கனியே காகிதத்தில் உன் கொடுக்க
கரம் பிடித்து கரு விழி
கணம் படிக்க கவி மொழியை
கண் கொட்ட காத்தி ருந்தேன்
கன்னிகை உன் கரம் பிடிக்க
கனியக் காத்தி ருப்பேன் காலம்
கட்டிக் கொண்டால் காத லதை.

கணம் மறுத்து எனை வெறுத்தால்
காதல் மட்டும் அழியாது கண்ணே
கிரகம் பல செல்லத் துணிவேன்
கீற் றெடுத்து என் னுடலை
குற்றம் ஏதும் கண்டால் என்னிடம்
கூறி விடு கூச்சம் விடுத்து
கெஞ்சிக் நிற்கிறேன் கனியே ஒலித்தால்
கேட்பேன் மனம் பொறுத்து இல்லையன்றி
கைப் பற்றி ஆயுத மேதும்
கொண்டு கொலை கண்டுவிடு எனை
கோடி புண்ணியம் நீ காண்பாய்
கெளடநெறியோடு காற்றில் நான் செல்ல.

எழுதியவர் : செல்வா.மு(தமிழ் குமரன்) (30-Dec-15, 11:02 am)
Tanglish : kaadhal ka kaா
பார்வை : 85

மேலே