நான் இப்படி நீங்கள் எப்படி
நல்லதைச் செய்கிறேன்-ஆனால்
நானோ நல்லவனாய் இல்லை!
உண்மையே பேசுகிறேன்
நானோ உண்மையாய் இல்லை!
நான் பொய் பேசியதில்லை
ஆனாலும் பொய்யாகவே வாழ்கிறேன்!
படித்தபடி நடக்கிறேன்
நான் படித்தவனாய் இல்லை!
நான் உலக நடிகனும் இலை-ஆனாலும்
உலகில் நன்றாகவே நடிக்கிறேன்!