புதிய ஆண்டே வருகவே
புதிய ஆண்டே வருகவே
பொலிவாய்ப் பூத்து வருகவே
கதித்துப் பாடி வருகவே
கவிதை யாக வருகவே !
மடமை நீக்க வருகவே
மகிழ்ச்சிக் கூட்ட வருகவே
கடமை யாற்ற வருகவே
கலக லப்பாய் வருகவே !
நடந்து வந்த நாட்களின்
நடுக்க மெல்லாம் மாற்றிடு
கடந்துச் சென்ற காலத்தின்
கவலை யெல்லாம் போக்கிடு !
மரிக்க வில்லை மனிதமே
மழையும் புரிய வைத்ததே
சரிந்த மனதின் வேதனை
தவிப்பும் நீங்கச் செய்திடு !
அமுதத் தமிழில் கொஞ்சிட
அழகாய் மிதந்து வந்திடு
சுமுக மாக உதித்திடு
சுபிட்சம் பெற வைத்திடு !
புனித மான பூமியும்
புன்ன கைக்கச் சிறந்திடு
இனிய ஆண்டே யெழிலுடன்
இன்று புதிதாய்ப் பிறந்திடு !
( அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் )