மலர்ந்தது புத்தாண்டு 2016

திரு வே.ஆவுடையப்பன் அமெரிக்காவிலிருந்து அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து.

மலர்ந்தது புத்தாண்டு!!! காலமகள் பெற்றெடுத்தாள் மீண்டும்ஒரு மழலை - நம் கண்ணெதிரே தவழவிட்டாள் புதியதொரு வரவை!

வாழ்த்தினை வெண்பாவாக ஆக்கினேன்.

இரு விகற்ப நேரிசை வெண்பா

மலர்ந்தது புத்தாண்டு! காலமகள் பெற்றெடுத்தாள்
குலம்தழைக்க மீண்டும் ஒருமழலை - நலம்பெற
நம்கண் ணெதிரே தவழவிட்டாள் நல்லவொரு
இன்ப புதியவர வை!

அன்புடன்,
வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-16, 11:03 am)
பார்வை : 122

மேலே