பொங்கலோ, பொங்கல்
தமிழர்களின் ஒரு விழாவாம்
தை திங்கள் திருவிழா!
காலங்கள் மாறலாம்
கலாச்சாரம் மாறுமா ?
பாரம்பரியத்தை காட்டுவதே
பண்டிகைகள் !
போகும் மார்கழியில்;
துன்பமும்,
துயரம்மும்,
தூரபோக,
போற்றுவோம்,
போகிப்பண்டிகை!
மறந்தே போனதே
மண்மணக்கும்
மண்பானை பொங்கல் !
வேற்றுமை கலைந்த
வெண்கல(பானை) பொங்கல் !
குதூகலம் தருதே
குக்கர் பொங்கல் !