வாசத்தை இழக்கலாமோ

வாசத்தை இழக்கலாமோ ?

விண்மீன்கள் நாவிற்கு விருந்தாகுமோ?
வெறும்பேச்சு செயலுக்கு துணை யாமோ?
கண்ணுக்கு இமைகள் பகை யாமோ ?
கருத்தில்லா சொற்கள் கவி யாமோ?
புண்ணுக்கு சுண்ணம் மருந் தாகுமோ?
எண்ணுக்கு பூஜ்யம் எதிரா குமோ?
எழுத்திற்கு மொழி தடை யாகுமோ ?

கன்றுக்கு பசுதான் பகை யாகுமோ ?
கனவுகள் தூக்கத்தை தொலைக் கலாமோ,
பண்புகள் தமிழிரினம் மறக்க லாமோ ?
படிப்புதான் ஒருவனை தாழ்த்தி செல்லுமோ?
நன்மலர்கள் வாசத்தை இழக்க லாமோ ?
நட்புதான் ஆபத்தில் நழுவ லாகுமோ?
நன்மனம்தான் துயரில் தடுமாறுமோ?
நல்அமுதம் உடலுக்கு நஞ்சாகுமோ ?


 கே. அசோகன்.

எழுதியவர் : கே.அசோகன் (1-Jan-16, 10:51 pm)
பார்வை : 70

மேலே