மரணத்திற்கு ஒரு தூது

என்றாவதொரு நாள்
கட்டாயம் எல்லோரையும்
தழுவப்போகும்
மரணமே..!
எவ்வித தயக்கமுமின்றி
இன்றே உனை நான்
அழைக்கிறேன்...!
என்னில் வலிதரும்
எத்தன்மையும்
உன்னிலில்லை
என்னை கலங்க வைக்கும்
எக்குணமும்
சிறிதுமில்லை...
வயதில் பலரும்
உனைக் கண்டு
அஞ்சியும்
நான் அஞ்சவில்லை...!
ஏனெனில்,
நீயென்
பகைவனில்லை...!
இவ்வுலகில்
அனைவரது வாழ்வும்
உன்னால் அழிந்துப்
போகவில்லை... அர்த்தம்
பெறுகின்றன...!
புதைந்துப்
போகவில்லை...
பொருளடைகின்றன...!
முடிந்துப்
போகவில்லை... மாறாக,
முழுமையடைகின்றன!!
இதை
உணராதார் கண்களுக்கே
நீ எமன்...!
இவ்வுண்மைகளை
முற்றுமுணர்ந்த
என் கண்களுக்கோ
என்றும்
நீயென் நண்பனே...!
ஆதலின்,
தாமதமின்றி தழுவு!
என்னுள்
புதுச்சரித்திரம் எழுது!!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤