காட்சிப் பிழைகள் - 23 - உதயா

நீ தொலைந்துப் போன
இராத்திரிகளில்
நான் வெறும் ஈசல் தானோ...?
விடிந்ததும் செத்துக்கிடக்கிறேன் ...!

சொர்க்கத்தில்
கறை ஒதுங்கவே
உன் நினைவினில்
தத்தளிக்கிறேன்

உன் பார்வையில் தான்
ஒளிச் சேர்க்கைச்
செய்துக் கொள்கிறது
என் உயிர்ச்செல்கள்

சில நாட்களாக
உன்னில் நான் இல்லை
என்னில் உன்னை தவிர
வேறெதுவும் இல்லை

உன்
நினைவுத் தூண்டில்
சிக்கிக்கொண்ட
மீன் நான்

நான் உன்னை
குறைச்சொல்ல மாட்டேன்
நீ அழகின் கற்பனை

நீ தலை துவட்டியத் துண்டில்
தங்கிவிட்ட முடியாய்
உன்னிலே தங்கிச் சிதைகிறது
என் உயிர்

அன்று நீதான் எனக்கு
முதல் குழந்தை என்றாய்
இன்று தான் புரிந்தது
நான் பெண் குழந்தை என்று

மழை பெய்தது
மலர்கள் கமழ்ந்தது
மீண்டும் மழைப் பெய்கிறது
மலர்கள் கருகுகிறது

அன்று நான் நடந்து வந்த சாலையும்
நாம் நடந்து போன சாலையும்
இன்று காணவில்லை

நீ வித விதமாய் பூத்தபோது
நான் கற்பக விருட்சமானேன்
நீ உதிர்ந்ததும்
செல் அரித்த மரக்கட்டையானேன்

நெருப்பும் திரியும் இருக்கிறது
ஆனால் எரிபொருளின்றி
எவ்வாறு உயிர்பிக்கும் இந்த விளக்கு

எனக்கு தெரியும்
உன் நினைவுகள் தான்
என் கல்லறைக்கு
சுரங்கப்பாதை என்று

நீ பதித்துச் சென்ற
பாதச்சுவடுகளில்
நெளிந்துக்கொண்டிருக்கிறது
என் மீதி வாழ்க்கை

நீ ஏற்படுத்திய
காயங்களுக்கு அடியில்
உன் நினைவுகள்
ஒளிந்துக் கொள்(ல்)கிறது

என் கரிசல் காட்டிற்குள்
முளைத்துக் கிடக்கிறது
நீ உடைத்த
நம் காதல் நினைவுகள்

உன் சமையல் அறையில்
என் உணர்ச்சிகள் தான் காய்கறிகள்
உன் விருப்பம் போல்
அறுத்துக் கொள்(ல்)

இப்போதெல்லாம்
உன் பெயருக்கு
என் குருதி ஆடை
நிரந்திரமாகி விட்டது

நான் வெறும் புழுதான்
என்னை கொல்ல வெடிகுண்டு எதற்கு ...?
எட்டித்தான் மிதியேன்
நீ மிதிப்பதற்க்குள் இறந்துக்கிடப்பேன்

உன் முதுகில் உள்ள
மச்சம் நானோ ...?
நீ என்னை பார்க்க கூட
நினைப்பதில்லையே ...?

ஞாபகங்கள்
உனக்கு கழன்றுப்போன இறகு
எனக்கு அதுதான் சிறகு

நீ என்னில்
கவிதையாகும் போதெல்லாம்
உன்னால் கசக்கி எறியப்படும்
காகிதம் நான்

உதயாவின் மரணமும்
அவள் நினைவுகளுக்குள் ஒளிந்துக்கொண்டது
இனி எமனின் பாசக்கயிறு
உதாயவிடம் தோற்றுத்தான் போக வேண்டும்

எழுதியவர் : உதயா (3-Jan-16, 6:35 am)
பார்வை : 735

மேலே