என் தாயின் கண்ணீர்
பொன் மாளிகையில் ஜொலிக்க வேண்டியவள்
இப்படி மண் தரையில் கண்ணீர் சிந்துகிறாள்
அவள் கண் துடைக்க
என் கரங்கள் அருகில் கொண்டு சென்றேன்
அவள் விழியில் வடிந்தது கண்ணீர் அல்ல என் எதிர் காலத்தின் கவலை
ஆசைக்கு அணைத்தவன் என் தாய் மேல் அன்பு செலுத்தவில்லை
ஓம்பு வருவது போல் அவள் வயிற்றில் நான் வளர
இந்த வாடிய மலர் வீட்டிலிருந்து வெளியேற்றி நடு ரோட்டை அடைந்தாள்
ஒரு
மனசாட்சி இல்லா மிருகம் செய்த வேலைக்கு நான் ஒரு கேள்விக் குறி ? என் தாய் ஒரு கேவலக் குறி .
படைப்பு:-
ravisrm