முற்றுப்பெற்றும் அழகு பெறாக்கவிதை

வினாக்கொத்துகள் வினாடிக்கு வினாடி வளர்ந்து விருட்சங்களாக
நினைவுகள் நிமிடத்துக்கு நிமிடம் நீண்டு வருடங்களாகுகின்றன..

நிழல்களோடு பேசியே காலங்களைக்கடக்க
நிதர்சனமான என்னுள்ளமும் அநித்தியமாகின்றன..

கிறுக்கிய வரிகள் அர்த்தமற்றுப்போக
காகிதத்தில் வடித்த என் கவிகள் யாவும் காணாமலேயே போய்விடுகின்றன..

முற்றுப்பெற்றும் அழகு பெறாக்கவிதையாக
என் பேனா மைகளோ தீர்ந்துவிடுகின்றன..

எழுதியவர் : பர்ஷான் (3-Jan-16, 1:35 pm)
பார்வை : 58

மேலே