மனைவிக்கு திமிர் பிடிக்க வைக்கும் கணவன்

இச்சை தீர்க்கும்
இளமைத்தேன்
இனிக்கத்தான் செய்யும்.!
அதற்காக ஆண்மை
அடிமை ஆவதேன்,
அழகினில்?

ரசிக்கவும் ருசிக்கவும்
களத்தில் தோற்கலாம்..
அது தாம்பத்யம்,
அதற்காக மனைவியிடம்
கணவன் மாணாக்கன்
ஆகலாகுமோ?

குடும்பம் என்பது
ஒரு கூடம்,
எல்லோருக்கும்
இங்கிதம் தெரியும்,
அனுசரிக்கவும்
ஆட்படவும் ஒரு
அளவு வேண்டும்..!

மனைவி என்பவள்
தாய்க்கு ஒரு தோழியாக
இருக்கலாமே ஒழிய
எப்பொழுதும் அவள்
எஜமானியாக முடியாது!
அது தானே இந்து மத தர்மம்..

சண்டைக்கோழியாய்
மாற்றிவிடவேண்டாம்..!
மனைவியை...
அவளுக்கே புரியாது
அவசரத்தில்
திமிர் என்பது வந்து விழும்
கண்ணுக்கு தெரியாத
மயிர் போல!

சில நேரம் கோபங்களை கூட
அளவுக்கு மீறி ரசித்து விடும்
கணவன் செய்யும் மிகப்பெரிய தவறு,
இவன் ஒன்றும் சொல்ல மாட்டான் என்றே
நினைக்க வைக்கும் அவளை.!

எனவே ஜாக்கிரதை,
சம்சாரம் ஒரு மின்சாரம்..!

எழுதியவர் : செல்வமணி (4-Jan-16, 12:36 am)
பார்வை : 412

மேலே