நெஞ்சம் கனத்தது
நெஞ்சம் கனத்தது
பள்ளிக்கு சிரித்த முகத்துடன்
செல்லும் குழந்தையை பார்க்கையில் நெகிழ்ந்த என் உள்ளம். . .
பண பற்றாக்குறையால் திரும்பி வரும் அவ்வாடிய முகத்தை காணயில் கனத்தது என் நெஞ்சம். .
உறவில் ஒருவர் கருவுற்று இருக்கிறார் எனக் கேட்கையில் மகிழ்ந்த என் உள்ளம். . . .
பெண் குழந்தை என்பதால் அழித்து விட்டோம் எனக் கூறிய அப்பெண்ணும் ஒரு
பெண் என மறக்கயில் கனத்தது என் நெஞ்சம். . . .
நாட்டு மக்களுக்காக உழைக்கும் விவசாயிகளை பார்க்கையில் பெருமிதமடைந்த என் உள்ளம். . . .
அவ்விவசாயியின் மகனே பார்டி என்கிற பெயரில் உணவை அழிக்கயில் கனத்தது என் நெஞ்சம். . .
தாய் என்றால் உயிராக நிற்கும் மகனை பார்க்கையில் நெழிந்த என் உள்ளம். . . . .
தனக்கென்று ஒருவள் வந்ததும் தன் தாயை முதியோர் இல்லத்திற்க்கு தத்து கொடுக்கையில் கனத்தது என் நெஞ்சம். . . .
நியாயத்தின் வழி நிற்கும் தங்கையை காணயில் நெகிழ்ந்த என் உள்ளம். . . .
அதே நியாயத்திற்க்காக தன் கணவனை இழக்கையில் கனத்தது என் நெஞ்சம். . . .