வழியுண்டு
வாழ்க்கை என்னும் வானிலையில்,
துன்பம் ஒரு பனிக்காலம்.
உறைந்து போன இதயமதில்,
உதயம் ஒருநாள் வந்துவிழும்.
மண்ணில் விழும் காலம் வரும்,
கண்ணீர் வந்து சோகம் தரும்.
எண்ணம் ஒன்றை இறுக பிடி!
மண்ணை ஆள வீரம் வரும் !!
சிந்தும் கண்ணீர் சேகரித்து-அதில்
நீந்தும் மீனாய் மாறிடுவோம்.
சிரிப்பில் நாட்கள் கழித்திடுவோம்,
கிழிந்த இதயம் சேர்த்திடுவோம் !!
ஒரு ஏழை வயிற்றுக்கு,
ஒரு வேலை உணவளிபோம்,
அவன் சிரிப்பில் கரைந்திடுவோம்,
இனி சோகம் மறந்திடுவோம்!!
ஒருகதவில் துன்பம் வரும்,
மறு கதவில் சோகம் வரும்!
இதயத்தில் வலிமை கொண்டால்,
இறுதிவரை இன்பம் தரும்!!
இறைவனிடம் உன்னை கொடு,
கருணையால் விண்ணை தோடு,
மரணத்தின் வாசல் வரை,
மகிழ்ச்சியின் வாசம் நிறை!!

