தாயும் சேயும்

தரணியெங்கும் தழைத்திடும்...
பெண் என்பவள் தாயேன்ற தரத்திலே...
கரு உதித்து பத்து மாதம் சுமந்தவள்.
சுற்றமிருந்தும்...
தனிமையில் ஆனந்தம் கொண்டாய்...
உன் கருவின் பிஞ்சு உயிரில்..
வருடினாய், பேசினாய்...
ரசித்தாய் தனிமையில் நீ..
அன்று விதைத்த அன்பு...
இன்றும் முளைத்து பறக்கிறது...
பாசமாய் உன் மகனிடம் இருக்கும் நிமிடங்களில்..
தகராறு செய்தாலும்...
தண்டனைகள் தந்தாலும்...
தனிமையில் அவன் செய்யும் குறும்புகளில்...
தன்னையே மறந்து சிலையாகி நிற்கிறாளே தாயவள்...
நீ கேட்கும் கேள்விக்கு...
அவன் பதிலேதும் சொல்லாமல்..
அவன் கேட்கும் கேள்விக்கு...
பதிலே இல்லாமல் நீ நிற்கிறாய்...
குடும்பத்தில் யார் இருந்தாலும்...
தனியாய்..
கேள்வியும் உன்னிடம் தான்...
பதிலும் உன்னிடம் தான்...
அன்னம் ஊட்டிட அன்னை..
நீ படும் பாடு...
தாலாட்டாய் நீ ஊட்டிவிட...
தரையெங்கும் சிதறி கிடப்பது..
அன்னம் மட்டும் தான்...
மனசுக்குள் பரவி நிற்கும் அன்னை உன் அன்பு..
கேள்விகள் தான் ஏராளம்..
சேட்டைகள் தான் தாராளம்...
தாய் நீ தனிமையில் இருக்கையிலே...
ஆவேசம் வந்தாலும்...
ஆனந்த சிரிப்பில் சாந்தமாய் மாறிட..
பாதையெங்கும் பார்வை தான்...
உன் மகன் பாதம் வைக்கும் வழியெங்கும்..
கைப்பிடித்து நடந்திடவும்..
வாயசைத்து பேசிடவும்...
விரல் இடுக்கில் எழுதிடவும்..
தாயே நீ கற்கிறாய்...
எத்தனையோ சொந்தமிருந்தும்..
எத்தனையோ பேர் சுற்றியிருந்தாலும்..
எந்த சுகமும் ஈடாகவில்லை...
தனியாய் மகனுடன் தாய் வாழ்ந்திடும்.. ஆனந்தம்...
யாருக்கும் கிடைத்திடாத அன்பு..
பெண்ணே தாயாய் நீ...
மகன்/மகளோடு இருக்கும் நொடியே போதும்..

எழுதியவர் : (5-Jan-16, 7:18 pm)
Tanglish : thayum seyum
பார்வை : 666

மேலே