கண்ணுறங்கு தாலாட்டு

தாயாக நானிருக்க
தாலாட்ட மடியிருக்க
தவம் செய்த பலன் இருக்க
தரணியில் தவழ்ந்து வரும்
தங்கமே நீ உறங்கு,
ஒரு நூறு உறவிருக்க
சொந்தங்கள் துணை இருக்க
பாக்கியமே உந்தனுக்கு
பாலுடன் சோறு உண்ண
பஞ்சமென்ன நீ உறங்கு,
நீயாக நான் இருக்க
நாற்புறமும் அன்பிருக்க
நிலவெல்லாம் சேர்ந்திட்ட
தண்ணொளி தானுந்தனுக்கு
தயக்கமென்ன நீ உறங்கு,
கண் நிறைந்த கண் மணியே
காத்திருக்க பார்த்திருக்க
காவலரோ நிறைய உண்டு
கலக்கம் இன்றி நீ உறங்கு
ஆரிரரோ ஆராரோ,
தாலாட்டும் எந்தன் குரல்
தாங்கிடுமே உன் குரலை
தாயினது தாலாட்டு
தவம் இருந்து வந்ததன்றோ,
ஆராரோ ஆரிரரோ
தங்கமே நீ
கண்ணுறங்கு ,கண்ணுறங்கு ,

எழுதியவர் : பாத்திமாமலர் (5-Jan-16, 9:16 pm)
பார்வை : 154

மேலே