மனஅறிவு போராட்டம்

மனஅறிவு போராட்டம்

தொட்டுச் செல்லும் தென்றலை
====சல்லித்து, சில்லென்ற காற்றை
====வடிகட்டி, மடியில் கட்டிக்கொள்ள,
====மூளையின் மூலையில் சிறுமுனகல்.

மூளையின் முனகலைய றிவறிய,
====தென்றலை தேடித்தேடி யலைய,
====கண்டுக்கொண்டு, அறிவு ஆராய,
====சல்லித்து, வடிகட்டி, மடிசேர்க்க!!!

என்னசெய்வது பின்னென யறிவேங்க,
====ஏனோ? அறிவுக்கு எட்டவில்லை,
====இடையில் மனந்தொட்டது மடியின்
====குளிர்ச்சி, யதன்மட் டற்றமகிழ்ச்சி.

அறிவி நோக்கம் மகிழ்ச்சியானது?
====தேடிவாடி நொடிங்கி போனது?
====தொடர்ந்து தொடர்ந்து சலித்தது!!!
====பறந்து விரிந்து விழித்தது!!!

விழித்த யறிவு விளித்தது மனதிடம்?
====மனமே, அறிவாயோ மகிழ்ச்சியை?
====அறிந்தால், சொல்வாயோ புகழ்ச்சியை?
====ம்ம்ம்ம்ம் மகிழ்ச்சி, மனதில் கொள்.

மதயானைகள் சதம் ஓட,
====நாடி நரம்புகள் அனிச்சையாகா,
====நீரோட்டம் கொதிப்பு உண்டாக்கா!!!
====நொடி நின்று யோசிக்கும் --------------------------- மகிழ்ச்சி

ஒளி கூட்டும் வைகறையும்,
====வெப்பம் கூட்டும் நண்பகலும்,
====சிகப்பு கம்பள மாலையும்,
====ஒன்றென யண்ணம் கொள்வது ---------------------------- மகிழ்ச்சி

சிறு மொட்டின் புன்னகையும்,
====மலர்ந்த மலர் சிரிப்பும்,
====உதிர்ந்த மலர் மணமும்,
====யதன் வனப்பும் அறிவது ----------------------------- மகிழ்ச்சி

ஆம்,
அறிவுக்கு தெரியும்,
மனதிற்கு புரியும்.

இன்று,
சுகம் தேடி அறிவு நாடி ஓடுது!!!
சுமை கூடி மனம் நொந்து வேகுது!!!

இருந்தும்,
மனதை விட்டு, அறிவை பற்றிய,
தெளிவற்ற கலங்கிய குளம் நாம்.

மோகம் விழையும் தேகம்,
====தாகம் தனியா விழிகள்?
====விரிய யோசிக்கும் கைகள்,
====அறிவு வூட்டும் பாடமிவை.

கலையும் மேகமாய் மோகம்,
====காணல் நீராய் கண்கள்.
====உள்ளங்கை தொடவென்னா கைகள்,
====மனம் கொண்ட தாகமிவை!!!

ஆமாம்
மண்ணைக் கடந்து
விண்ணைக் கடந்து
அண்டம் கடந்து,
பால்வெளியில் புக,
அறிவால் முடியும்,
புக்கினும், மனதாலே
புரிந்துகொள்ள முடியும்.

தோல்வி,
அறிவு குரோதம் கொள்ளும்
மனம் வேதனை கொள்ளும்

அறிவு பொறாமை கொள்ளும்,
மனம் தளர்ச்சிக் கொள்ளும்.

வெற்றி
அறிவு களிப்பு கொள்ளும்,
மனம் விழிப்பு கொள்ளும்

அறிவு கர்வம் கொள்ளும்
மனம் நிம்மதி கொள்ளும்.

எனில்,
அறிவு வறிஞன்,
மனம் அறிஞன்.

இருந்தும்,
அறிவு புரிந்தும் கொள்ளு(ல்லு)ம்,
மனம் என்றும் வெல்லு(ல்ல)ம்.

ஆம்
அறிவு வெல்ல எண்ணும்,
மனம் வெல்ல(வெள்ள) எண்ணம்.

இரா நவீன் குமார்

எழுதியவர் : இரா நவீன் குமார் (6-Jan-16, 2:06 am)
பார்வை : 169

மேலே