அம்மா

அம்மா...!
அழுதாய் நீ...அம்மா
அழகாய் நான்!
துடித்தாய் நீ...அம்மா
தரையிலே நான்!
உடைந்தாய் நீ...அம்மா
உயிரோடு நான்!
அள்ளி அணைத்தாய் நீ...அம்மா
அரும்பாய் நான்!
பேரின்ப வெள்ளத்தில் நீ...அம்மா
பெற்றவள் முகம் பார்த்தேன் நான்!
வெண்குருதி ஊட்டினாய் நீ...அம்மா
வெண்ணிலவாய் நான்!
அழுதாய் நீ...அம்மா
அழகாய் நான்!