வெ. ஹரிஹர விஸ்வநாதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வெ. ஹரிஹர விஸ்வநாதன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 03-Oct-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 142 |
புள்ளி | : 9 |
தமிழை காதலிப்பவன் நான்!
வீராப்பா சுத்தின பயபுள்ள..
நீறூத்தா பொங்கி நான் துள்ள..
சிறகொடிஞ்சு வீழ்ந்தேனே மண்ணுக்குள்ள..!
எனக்கேதும் குறையில்ல..
விளையாட்டு சிறுபிள்ள..
ஆனேனே கைபிள்ள, காலம் செல்ல செல்ல..!
உயிர்நாடி இங்கில்ல..
இதுபோல இருந்ததில்ல..
மனசொடிஞ்சு கிடந்தேனே மெல்ல மெல்ல..!
காத்து கண்ணுக்கு தெரிவதில்ல..
காதல் மனசுக்கு மருந்துமில்ல..
தூரம் இருந்துங்கூட நாம வேறில்ல..!
உன தவிர நெனபில்ல..
உன் கை, என் கைக்குள்ள..
இருந்தாலே போதும் வாழ்வேன் புள்ள..!
என்னான்னு நான் சொல்ல..
நீயின்றி சுகமில்ல..
இருட்டோடு உறவாடி காலம் தள்ள..
இதுகூட பரவால்ல..
என்கூட யாருமில்ல..
எதுக்காக என் வாழ்க்கை விளங்கவில்ல.
அம்மா...!
அழுதாய் நீ...அம்மா
அழகாய் நான்!
துடித்தாய் நீ...அம்மா
தரையிலே நான்!
உடைந்தாய் நீ...அம்மா
உயிரோடு நான்!
அள்ளி அணைத்தாய் நீ...அம்மா
அரும்பாய் நான்!
பேரின்ப வெள்ளத்தில் நீ...அம்மா
பெற்றவள் முகம் பார்த்தேன் நான்!
வெண்குருதி ஊட்டினாய் நீ...அம்மா
வெண்ணிலவாய் நான்!
அழுதாய் நீ...அம்மா
அழகாய் நான்!
அம்மா...!
அழுதாய் நீ...அம்மா
அழகாய் நான்!
துடித்தாய் நீ...அம்மா
தரையிலே நான்!
உடைந்தாய் நீ...அம்மா
உயிரோடு நான்!
அள்ளி அணைத்தாய் நீ...அம்மா
அரும்பாய் நான்!
பேரின்ப வெள்ளத்தில் நீ...அம்மா
பெற்றவள் முகம் பார்த்தேன் நான்!
வெண்குருதி ஊட்டினாய் நீ...அம்மா
வெண்ணிலவாய் நான்!
அழுதாய் நீ...அம்மா
அழகாய் நான்!
கொழுத்த அமாவாசையாம் தீபா வளிக்கு
பழுத்த பழமொன்று கரவேடுகட்டி
பழமை வழக்கங்களை ஆசையோடு சீராக்கி
அழைப்புறுமவர்க்கு யாதுரைப்பேன்? - நல்
நேரங்கூடி அருந்ததி தேடி கரங்கொணர்
அரம்பை பௌர்ணமியாய் உடன்மின்ன
இனி யென்றுமில்லை யமக்கு தீபாவளி
என்னவளோடு யாமிருக்கும் வரையிலே !!
முதன்முதலில் உன்னிடம் வாங்கிய
பத்து ரூபாய் நோட்டை பாத்து பாத்து பத்ரபடுத்தி வெச்சுருந்தும்
எப்படியோ தொலஞ்சு போக, அழுகை வந்துருச்சு எனக்கு!
அப்போ, என்னை கட்டிப்புடிச்சு
'பத்து ரூபாய் நோட்டு தானடா போச்சு,
இதுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா' னு
நீ தந்தாயே முத்தம் - "ஆஹா !!"
உன்னைத் தவிர உன்னுடையதை எல்லாம்
தொலைத்துவிட்டு அழலாம் என
தோன்றியதுடி எனக்கு!
நண்பர்கள் (6)

சூரியபிரபா ராஜேந்திரன்
கோயம்புத்தூர்

சேகர்
Pollachi / Denmark

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

பிரவின் ஜாக்
கன்னியாகுமரி
