பூந்தமிழை அளிப்பாய்
பூந்தமிழை அளிப்பாய்!
சுந்தரவேலவா இன்னுமேன் தயக்கம் –
----சுந்தர வடிவினிலே மயக்கம்!
வந்தனங்கூறி வணங்கிட அருள்வாய்!-புள்ளி
---வண்ணகலாப மேறி தமிழைத் தருவாய்!
சுந்தர வேலவா
குன்றேறி வந்திடுவேன் நாளும் – நின்
--- குன்றாபுகழ் பாட கவிகள் தா-தா!
தென்றல்தனில் தமிழிசை உலவிடும் – சுவை
--- தேமதுரதமிழ் என்நாவினில் நிலவிடும்
சுந்தர வேலவா
மங்காத நின்னழகை நான் பாட – என்றும்
---மங்கா அழகுவள்ளி தனைகூடி
பொங்கிடும் இன்பத்திலே களிப்பாய்! – எனக்கு
--- பூந்தமிழை மனத்தினிலே அளிப்பாய்!
சுந்தர வேலவா
--- கே. அசோகன்.

