மறுநாளில் பூக்கவே
மறுநாளில் பூக்கவே!
பூந்தேனை தேனீக்கள்
சேகரிக்க…..
எடுக்கிறோம்
துவண்டா போகிறது?
தேனீக்கள்!
மனங்கமழ் மலர்களை
பறித்துக் கொள்கிறோம்!
மறுத்துதான் விடுகிறதா?
செடிகள்
மறுநாளில் பூக்கவே!
எவ்வளவு எடையாயினும்
இழுத்து போகிறதே!
எறும்புகள்!
இழுக்காமல் விடுகிறதா?
எந்த பொறியாளன் ?
வகுப்பு எடுத்தான்
தூக்கணாங்குருவிகளுக்கு
அழகான கூட்டை….
அதுதானே கட்டுகிறது
துவண்டால் தோல்வி
துணிந்தால் வெற்றி!‘
துவள்வதும் துணிவதும்
தோழா உன்கையில்!
--- கே. அசோகன்.