ராக்கெட்- நகைச்சுவை குட்டிக் கதை

................................................................................................................................................................................................

ஶ்ரீ ஹரிக்கோட்டா தமிழ்நாட்டில் இல்லை. ஒருவேளை இருந்தால்...

எஸ் எல் வி ராக்கெட் 18 செயற்கைக் கோளை சுமந்து பூமியின் சுற்று வட்டப் பாதைக்குச் செல்லத் தயாராகிறது.. கவுண்ட் டவுன் ஆரம்பம்..

ஒன்பது.. எட்டு.. ஏழு...

ஒருத்தர் ஓடி வருகிறார்...

“ ஏய்...ஏய்.. நிறுத்து..! நிறுத்து..! முக்கியமான விஷயத்தை மறந்துட்டியே? ”

விஞ்ஞானிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்...

“எதுவும் மறக்கலியே..? எவ்ரி திங் இஸ் ஆல்ரைட்..! ”

“யோவ்.. ராக்கெட்ல அம்மா ஸ்டிக்கரை ஒட்டுய்யா..! ”

“அப்படியெல்லாம் செய்ய முடியாது இங்க.. ஹலோ போலிஸ்.. இவரைக் கூட்டிட்டுப் போங்க.. என்ன போலிஸ்யா நீ? என்னை எதுக்குத் தூக்கறே? ”

“ஐயையோ? பெரிய விஞ்ஞானியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களே? இப்ப ராக்கெட்டை எப்படி விடுறது? ”

“ஷ்.. ஷ்.. தள்ளிப் போய்யா...! அந்த இடத்துல அலங்கார மேடை கட்டு.. பத்து கிலோ மீட்டர் தூரத்துக்கு ப்ளக்ஸ் போர்ட், பேனர் வை.. லாரியில தொண்டர்களை வரச் சொல்லு.. இங்க மானாட்டம் மயிலாட்டம் எல்லாம் நடத்து..! ”

“ராக்கெட்டுக்கு பச்சை கலர் அடிச்சிடலாம்.. ”

“ஐயையே, இந்த பாகம் எதிர்கட்சி ஆட்சியிலே செஞ்சது..!”

“அத கழட்டு..! அத அப்படியே ஆஸ்பத்திரிக்கு கொடுத்துடலாம்..!”

“அவங்க என்ன செய்வாங்க?

“நாற்காலி பண்ணி நோயாளிங்க உட்கார போட்டுக்குவாங்க..!”

“அம்மா ராக்கெட் பக்கத்தில நிக்கிற மாதிரி கிராபிக்ஸ் பண்ணு.. அப்படியே அவங்க பேச்சையும் வாட்ஸ்ல அப்பு...!

“ ம்..ம்.. ராகு காலம் முடிஞ்சி நல்ல நேரம் வந்துடுச்சு..! மகமாயி...! இந்த செயற்கைக் கோளை வச்சி எதிர்க் கட்சிங்க சதியெல்லாம் உடனே உடனே தெரியப்படுத்து.. ”

“அம்மாவின் ஆணைக்கிணங்க...”

“ ராக்கெட் ஓட மாட்டேங்குதே? ”

“ படுக்க வச்சி ரெண்டு ஒதை குடு.. ”

ராக்கெட் பக்கவாட்டில் பறந்து குடாஸ் கம்பெனிக்குள் போகிறது...



“ டொம்..ம்....! ”

எழுதியவர் : அருணை ஜெயசீலி (8-Jan-16, 12:58 pm)
பார்வை : 1902

மேலே