உறவுகள்
தினசரி பிரச்சினை,
அவ்வப்பொழுது ஒரு வடிகால்,
மிச்சம் மீதியுடன் ஒரு மௌனம்,
மயக்கம் போல் ஒரு அமைதி..
சரி சரி என்று
சம்பந்தப்பட்டவருடன்
அனுசரி..!
சராசரி அனுஹுலம்
தான் சரியான அடைக்கலம்...
வாழ்க்கையில் எது
கிடைக்காமல் போனாலும்
பரவாயில்லை;
நம் மீது
அன்பும் அக்கறையும் கொண்ட
சில உறவுகள் மட்டும்
கிடைத்தால் போதும்..!!
வலியுடன்,
வாய்ப்பு வரும்....
அந்த வழியுடன்...
...வாழ்க்கை வளரும்....!!!