பொங்கல்
பொங்கல்
ஏர் பிடித்து நிலம் உழுது
கழனியில் கால் வைத்து
களையெல்லாம் களைந்து
கதிர் கொய்து பதரடித்து
நெல் மணிகள் கூட்டிவைத்து
பாரில் உள்ளோர் பசி தீர
களம் இறங்கும் உழவரினம்
மெய்யாய் விளங்கும் பகலவனை
பொற்றி கொண்டாடும் பெருநாளாம்
பொங்கல் என்னும் திருநாளாம்..

