நான்கு வயதில் எத்தனை கால்
தாத்தாவும், பேரனும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
தாத்தா பேரனிடம் கேட்டார்,’’ஒரு ஆட்டுகுட்டிக்கு
ஒரு வயதில், நான்கு கால் என்றால் நான்கு வயதில்
எத்தனை கால்?
பேரன் யோசிக்காமலேயே,அவசர,அவசரமாக
4 x4 =16 என்று பதினாறுகால் என்றான்.
தாத்தா,’’மடையா! ஆட்டுக்குட்டிக்கு ஒரு
வயதில் நான்கு கால் என்றால்,நான்கு வயதிலும்
நான்கு கால்தான் என்ற அறிவு வேண்டாமா?’’
என்றார்.
இதை கவனித்துக்கொண்டிருந்த பையனின்
அம்மாவுக்கு, வந்ததே கோபம்,தாத்தாவை பார்த்து,
‘’உங்களுக்கு தான்,புரியலே மாமா... என் மகன்
சரியாகத்தான் சொல்கிறான்.பதினாறுகால்னா...
16 x1/4 னு அர்த்தம், 16 x1/4 எவளவு? நாலு.’’
என்று மகனை அன்புடன் அணைத்துக்கொண்டார்.
தாயன்புக்கு இணை எதுவுமில்லை!!!!