இலங்கை விடியலின் ஓராண்டு

உடும்பாக இருந்த
குடும்பாட்சி ஒன்று
தடம் புரண்ட நிகழ்வு
இடம் பெற்ற நாள் இது.
சாதி வெறி பேசி
ஆதரவு தேடியோர்
நாதியின்றிப் போக
பேதி மருந்து கொடுத்த நாள்
வெள்ளை வேன் கடத்தல்
பள்ளி வாயல் தாக்கல்
தொல்லைகள் பலவும்
இல்லாமல் போன நாள்
குடு கொண்டு வருதல்
நடு ரோட்டில் சுடுதல்
கொடுமைகள் பலவும்
விடைபெற்று சென்ற நாள்
பொல்லாத விலைகளால்
பிள்ளையை ஆற்றிலே
தள்ளிக் கொன்ற நிலை
இல்லாமல் போன நாள்
மீடியா சொல்வதை
காடையர் சேர்ந்து
மூடி மறைப்பது
ஓடி ஒழிந்த நாள்
பொது பல என்னும்
புது பலாய் கிளப்பி
சதி செய்த கோட்டா
கதி கலங்கிப் போன நாள்.
புலிகளை ஒழித்ததால்
அழியாதப் புகழ் கொண்டும்
இழிவான செயல்களால்
மலிவாகத் தோற்ற நாள்.
சிறுபான்மை இணைந்து
ஒரு நாட்டின் விதியை
சரியாக மாற்றிய
அரிய நாள் இது.
புதிய ஆட்சியிலும்
சதிகாரர் இருந்தாலும்
பழைய ஆட்சிபோல்
பயங்கள் பெரிதாய் இல்லை.