அருத்த முளவாழ்வு அடியாருக்கு அளியாயோ
09-10-16
அருத்த முளவாழ் வடியாருக் களியாயோ?
கலிவிருத்தம்.
01
இருட்டில் இருந்தே எடுத்த,நூல் ஊசிபுகா
வருத்தம் படித்தே வாய்மதிப்பு காட்டுவேனோ?
பொருத்தமில் நிறமாலைப் பொய்ப்புகழில் நான்மயங்கி
கருத்தமதிக் கறைவிலக்கும் கதிரவனைக் காண்பேனோ?
பொருளுரை:
அறியாமை என்ற இருளினை விலக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல், அதில் இருந்து கொண்டே, பிறவியெடுத்த இந்த ஆன்மாவைப் படைத்த பரமனின் உலகினுக்குள் செலுத்த முடியாதவனாக இருக்கின்ற நிலைமையின் வருத்தத்தைத் துன்பத்தைப் பாடிக்கொண்டே இருந்து வெறும் வாய்வார்த்தைகளால் எனது மதிப்பை, புகழை அதிகரித்துக் காட்டிக்கொள்ள நினைப்பேனோ?
எனக்கும் எனது செய்கைகளுக்கும் சிறிதும் பொருத்தமில்லாத, பிறர் சொல்லும் பலவகையான புகழ்ச்சிகளில் மயக்கம் கொண்டு, என்னுடைய அழுக்கான மனத்தின் குறைகளைக் களையக் கூடிய ஞான ஒளியினைப் பெறுவேனோ?
இலக்கணம்:
இருட்/டில்/ - இருந்/தே/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
இருந்/தே/ - எடுத்/த/நூல்/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
எடுத்/த/நூல்/ - ஊ/சிபு/கா/ புளிமாங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
ஊ/சிபு/கா/ - வருத்/தம்/ கூவிளங்காய் - நிரை கலித்தளை
வருத்/தம்/ - படித்/தே/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
படித்/தே/ - வாய்/மதிப்/பு/ புளிமா - நேர் நேரொன்றிய ஆசிரியத்தளை
வாய்/மதிப்/பு/ - காட்/டுவே/னோ/ கூவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
காட்/டுவே/னோ/ - பொருத்/தமில்/ கூவிளங்காய் - நிரை கலித்தளை
பொருத்/தமில்/ - நிற/மா/லைப்/ கருவிளம் - நிரை நிரையொன்றிய ஆசிரியத்தளை
நிற/மா/லைப்/ - பொய்ப்/புக/ழில்/ புளிமாங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
பொய்ப்/புக/ழில்/ - நான்/மயங்/கி/ கூவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
நான்/மயங்/கி/ - கருத்/தம/திக்/ கூவிளங்காய் - நிரை கலித்தளை
கருத்/தம/திக்/ - கறை/விலக்/கும்/ கருவிளங்காய் - நிரை கலித்தளை
கறை/விலக்/கும்/ - கதி/ரவ/னைக்/ கருவிளங்காய் - நிரை கலித்தளை
கதி/ரவ/னைக்/ - காண்/பே/னோ/ கருவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை

02.
கறுத்த மனத்தான் கண்முன்னே சிதறுமினம்
வருத்தம் தராத வகைனின்று மடிவாரைத்
திருத்த வருமெம் திரித்துவரைப் பாடேனோ?
அருத்த முளவாழ் வடியாருக் களியாயோ?
பொருளுரை:
வெஞ்சினக் கோபத்தையுடைய மனத்தினால் தம் முன்னேயே தமது இனமும் உறவுகளும் சிதறுண்டு போவதைக் கண்டும் வருத்தம் கொள்ளாதவர்களாக தமது முனைப்புகளில் நின்று இறக்கின்றவர்களைத் திருத்துவதற்காக வருகின்ற, ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முக்கரணங்களாகவும், கர்த்தர், காப்பவர், கடைத்தேற்றுபவர்
என்ற மூவராகவும் உள்ள ஒருவரை நோக்கி , பொருளுள்ள வாழ்க்கையினை உமது அடியார்களாகிய எங்களுக்குக் கொடுப்பாயோ என்று வேண்டித் துதித்துப் பாடமாட்டேனோ?
இலக்கணம்:
கறுத்/த/ - மனத்/தான்/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
மனத்/தான்/ - கண்/முன்/னே/ புளிமா - நேர் நேரொன்றிய ஆசிரியத்தளை
கண்/முன்/னே/ - சித/றுமி/னம்/ தேமாங்காய் - நிரை கலித்தளை
சித/றுமி/னம்/ - வருத்/தம்/ கருவிளங்காய் - நிரை கலித்தளை
வருத்/தம்/ - தரா/த/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
தரா/த/ - வகை/னின்/று/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
வகை/னின்/று/ - மடி/வா/ரைத்/ புளிமாங்காய் - நிரை கலித்தளை
மடி/வா/ரைத்/ - திருத்/த/ புளிமாங்காய் - நிரை கலித்தளை
திருத்/த/ - வரு/மெம்/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
வரு/மெம்/ - திரித்/துவ/ரைப்/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
திரித்/துவ/ரைப்/ - பா/டே/னோ/ கருவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
பா/டே/னோ/ - அருத்/த/ தேமாங்காய் - நிரை கலித்தளை
அருத்/த/ - முள/வாழ்/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
முள/வாழ்/ - வடி/யா/ருக்/ புளிமா - நிரை இயற்சீர் வெண்டளை
வடி/யா/ருக்/ - களி/யா/யோ/ புளிமாங்காய் - நிரை கலித்தளை
03
ஏடுமே கூட்டி எடுத்தியம்ப மாட்டானைத்
தோடுமே போட்டுத் தொட்டழகு பார்ப்பேனோ?
காடுமே கேட்டுக் கண்ணீரால் நனைப்பேனோ?
வீடுமே காட்டி விடையளிக்க வாரானோ?
பொருளுரை:
உலகத்திலுள்ள அறிவியல் புத்தகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விளக்கிக் கூறமாட்டாத ஒருவனை அணியலங்காரங்கள் செய்து உருப்படுத்தி ஈடுபாடுகள்
கொண்டிருப்பேனோ? விரக்தியுற்று மரணம் எங்கின்ற காட்டிற்குள் அனுப்பிவிடக் கோரிக்கைகள் செய்து கண்ணீர் விட்டழுது என்னுடலையே நனைத்துக் கொள்வேனோ? இவற்றிலிருந்தெல்லாம் எனக்கு விடுதலை கொடுத்துப் பரனுன் வீட்டினை எனக்குக் காட்டி, கொடுத்து எனது பிறவிக்கும் வேண்டுகோள்களுக்கும் ஒரு பதில் கொடுப்பவராக அவர் வரமாட்டாரா?
இலக்கணம்:
ஏ/டுமே/ - கூட்/டி/ கூவிளம் – நேர் =இயற்சீர் வெண்டளை
கூட்/டி/ - எடுத்/தியம்/ப/ தேமா – நிரை =இயற்சீர் வெண்டளை
எடுத்/தியம்/ப/ - மாட்/டா/னைத்/ கருவிளங்காய் – நேர்=வெண்சீர் வெண்டளை
மாட்/டா/னைத்/ - தோ/டுமே/ தேமாங்காய் – நேர் =வெண்சீர் வெண்டளை
தோ/டுமே/ - போட்/டுத்/ கூவிளம் – நேர் =இயற்சீர் வெண்டளை
போட்/டுத்/ - தொட்/டழ/கு/ தேமா – நேர் =நேரொன்றிய ஆசிரியத்தளை
தொட்/டழ/கு/ - பார்ப்/பே/னோ/ கூவிளங்காய் – நேர் =வெண்சீர் வெண்டளை
பார்ப்/பே/னோ/ - கா/டுமே/ தேமாங்காய் – நேர் =வெண்சீர் வெண்டளை
கா/டுமே/ - கேட்/டுக்/ கூவிளம் – நேர் =இயற்சீர் வெண்டளை
கேட்/டுக்/ - கண்/ணீ/ரால்/ தேமா – நேர் =நேரொன்றிய ஆசிரியத்தளை
கண்/ணீ/ரால்/ - நனைப்/பே/னோ/ தேமாங்காய் – நிரை =கலித்தளை
நனைப்/பே/னோ/ - வீ/டுமே/ புளிமாங்காய் – நேர் =வெண்சீர் வெண்டளை
வீ/டுமே/ - காட்/டி/ கூவிளம் – நேர் =இயற்சீர் வெண்டளை
காட்/டி/ - விடை/யளிக்/க/ தேமா – நிரை =இயற்சீர் வெண்டளை
விடை/யளிக்/க/ - வா/ரா/னோ/ கருவிளங்காய் – நேர்=வெண்சீர் வெண்டளை
========== =========