அந்தரங்கம்

அந்தரங்கம் ஊமையானது
அந்தக்காலம்;

நம்மைப்பற்றிய மற்றவர்
எண்ணம் பற்றி
கவலை கொண்ட
நாம்

போகப்போக மாறி விட்டோம்;

என்னைப்போல் தான்
இவனும் அல்லது
நான் எவ்வளவோ
தேவலை என்றானபின்

ஒழிக்க ஒளிக்க
ஏதுமில்லை இங்கே இன்று..!

யாரேனும் நம்மை அணுகி
சொல்லிய ஆறுதல் அன்று
தேம்பி அழுத நமக்கு
வடிகாலானது;

இன்றோ,
அட போடா என்கிறோம்;
என்னடா பொல்லாத வாழ்க்கை என்கிறோம்;
ஹோ, எனக்கென்ன மனக்கவலை என்கிறோம்;

காரணம்,
தன்னம்பிக்கையும்
ரகசியங்களுக்கு
வெளிச்சம் போட்டு நாமே காட்டி
பெருமை கொள்கிறோம்
இன்று..;

உண்மை தானே?

எழுதியவர் : செல்வமணி (9-Jan-16, 11:13 am)
Tanglish : antharangam
பார்வை : 249

மேலே