பூரிப்பும் பொலிவானதே
பூரிப்பும் பொலிவானதே!
பூசிய சந்தனத்தின்
வாசத்தையும்…
மிஞ்சியதே!
பூரித்த கன்னங்கள்
பூப்பெய்த பெண்ணுக்கு!
பூப்பெய்த பெண்
பூத்திடும் புன்னகையோ
பொக்கிஷமானதே..
முறைமாமனுக்கு!
முறைமாமன் தந்த
முத்துமணி மாலையோ..
முறைமாமனை!
மறவாதே என்றன
முறைமாமன் கண்களோ
முத்துமணி பெண்ணை
மொய்த்திருக்க.
பூனைகளாய்………
விடலைகள் இரசிக்கையிலே…
பொசுக்கி விட்டே
முறை மாமன்
மார்பினிலே!
புதைந்து போனாள்!
பூரிப்பும் பொலிவானதே!
----- கே. அசோகன்.