நாய் கேட்ட நியாயம்
நிற்பதற்கு நேரமில்லை
வேலையும் இல்லை
எங்களுக்கு
வேலையுண்டு ஆனால்
நிம்மதியில்லை
உங்களில் பலருக்கு
எங்களுக்கு
வெறிபிடித்தால்
பிடிப்பதற்கு வண்டி உண்டு
உங்களில் பலருக்கு
பணவெறி , மதவெறி,
சாதிவெறி, மொழிவெறி,
இனவெறி, நிறவெறி
பிடிப்பதற்கு வண்டி உண்டோ?

