கோப்பை முத்தங்கள்..
நம் வாழ்க்கையும் ஒரு
தேநீர் கோப்பை தான்...
டீ நிறைந்து இருந்தால்
கோப்பைக்குப் பல முத்தம் தினமும்...
டீ காலியானால்
தலை கீழாய் தொங்கும் கோப்பை...
பணம் இருந்தால்
இளமை ததும்பி இருந்தால்
வலிமை இருந்தால்
புகழ் இருந்தால்
ஆரோக்கியம், அறிவு இருந்தால்
பலராலும் பார்க்கப் படுவோம்...
ஒன்றும் இல்லாத
பரதேசியாய்த் திரிந்தால்
வலிமை குறைந்து வயதானால்
சீண்டுவார் யாருமில்லாத
தேநீர்க் கோப்பை தான் நாம்...
தலை கீழாய்த் தொங்க வேண்டியது தான்..
தனி ரூம், தனிக் கட்டில், தனி மூலை...