அட அங்க பாரு கண்கள் வருது

அங்க பாருடா. யார் வர்றதுன்னு.
-------------------------------------------
யாருடா வர்றது?

கண்கள் வருதுடா.

கண்கள் எப்படிடா வரும்.

கண்கள் எல்லாருக்குந்தான் இருக்குது. நீ யாரைச் சொல்லற?

அட அங்க வர்ற அந்தச் சின்னப் பொண்ணப் பாருடா.


சரி பாக்கறேன். நீயெங் கண்கள் வருதுன்னு சொன்ன?

அட அந்தப் பாப்பா பேரு நைனா- டா

என்னது நைனாவா? சென்னைத் தமிழ்ல தான் இன்னா நைனான்னு சொல்லுவாங்க. நீ சொல்லற நைனாவுக்கு என்னடா அர்த்தம்?

சமஸ்கிருதத்திலெ நைனா-ன்னா கண்கள் இன்னு அர்த்தம்டா.

அட பரவாயில்லையே நல்ல பேரு தான். நாம தமிழிலே கண்மணி-ன்னு பேரு வைக்கற மாதிரின்னு சொல்லு.
===============
நன்றி: கூகுலில் வலைத் தளங்கள் சில.

================
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர் அறிய. என்னிடம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு மாணவியின் பெயர் நைனா. அவர் ஒரு பள்ளியில் பணியாற்றுகிறார்.
----------------------------------------------------------------------
நைனா Eyes
నైనా; ਨੈਨਾ; নৈনা; ನೈನಾ; നൈനാ; નૈના;

-----------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : மலர் (9-Jan-16, 11:19 pm)
பார்வை : 225

சிறந்த நகைச்சுவைகள்

மேலே