குடிமகன்

பேருந்து நிலைய அமரும் இடத்தில் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறார்.. காவல்துறையினர் பேருந்து நிலையத்தை கண்காணித்து சுற்றி வருகிறார்கள்..

காவல்துறை அதிகாரி 1 : என்னமோ தூங்குறான்.. ம்ம் . நம்ம பொழப்பு தான் ராக்கோழி கணக்கா இருக்கு.. அவனை தட்டி வேற எழுப்பனும்..
(அருகில் சென்று அழைத்தும் பயனில்லை )
காவல்துறை அதிகாரி 2 : குடித்து தூங்குறான் நு நினைக்குறேன்..
காவல்துறை அதிகாரி 1 : அடி கொடுத்தா தான் சரி வரும்..
(லத்தியால் இரண்டு அடி விழ, மெதுவாய் கண் திறந்து பார்க்கிறான்)
குடிமகன் : என் வீடு வாசல் ல நான் படுத்து இருக்கேன்.. என்னையை ஏன்டா அடிக்குற.. யாருடா நீ..
காவல்துறை அதிகாரி 1 : போலீஸ் டா..
குடிமகன் : நீங்க ஏன் சார் எங்க வீட்கு வந்தீங்க...
காவல்துறை அதிகாரி 2 : இது உன் வீட்டாடா .. எழுந்திருடா...
(லத்தியால் இரண்டு அடி விழ, சற்று எழ)
குடிமகன் : ம்ம்.. இது என் வீடு இல்லையா.. சாரி சார்.. உங்க வீட்டு வாசல் நு தெரியமா படுத்திட்டேன் சார்...

காவல்துறை அதிகாரி 2 : ?!?!?!
காவல்துறை அதிகாரி 1 : எல்லாம் உள்ள போன சரக்கோட வேலை.. நீங்க கண்டுகாதீங்க.. வாங்க .. அங்க ஒருத்தன் கிடக்குறான்.. அவனை பார்போம்..

எழுதியவர் : வைஷ்ணவதேவி (9-Jan-16, 1:27 pm)
Tanglish : kudimagan
பார்வை : 264

மேலே