மனையாஅரண்மனையா

நத்தை வயிற்றில் பிறந்ததால்
முத்து பெருமைப்படலாம்
ஆனால் மூடர்கள்
எத்தனை இருந்தாலும்
பெருமைப்படமுடியாது!
அன்பெனும் தீ மூட்டி
பாசமாக சமைத்து
பார்த்து பார்த்து வளர்த்தவள் தாய்!
பாசத்தை அடகு வைத்து
பணத்தை பெரிதாய் நினைத்து
மதி கெட்டு
மனைவியின் பேச்சில்
மயங்கி
தாயின் நேசத்தை மறந்து
முதியோர் இல்லத்தில் தள்ளினாய்!
தாயின் கனிவும்,அக்கறையும்
கொட்டிக் கொட்டி
கொடுத்த செல்வத்தின் முன்னும்
ஈடாகா செல்வமே
தாய் எனும் செல்வம்!
தேடி தேடி உன்
தேவைகளை நிறைவேற்றியவள்
வாடிய சருகாய் எங்கோ..?.
தவமிருந்தாலும் கிடைக்காதது தாயன்பு
மூடர்களுக்கு எத்தனை இருந்தாலும்
கிடைக்காத பெருமை போல்
தாயில்லாத உன் மனை
நிலையில்லாத அரண்மனை
கூடல் கோபுரமே ஆனாலும்
பெருமை கொள்ளாது