ஒரு இதயத்தின் துடிப்பு 555

இதயம்...
தசைகளும் எலும்புகளும் பூட்டிய
சிறைக்குள் இருப்பதால்...
என்னை தட்டி எழுப்பவும்
தொட்டு அணைக்கவும் யாருமில்லை...
இன்னுமும் அனாதையாய்
இருக்கிறேன் யாருமின்றி...
நான் யாருக்காக துடிகிறேனோ
அவர்கள்கூட என்னை நேசிப்பதில்லை...
எனக்குள் நானே
விழித்து எழுந்து...
விடியலை நோக்கி
இருட்டுக்குள் இருக்கிறேன் நான்...
நான் வெளியே வந்துவிட்டால்
ஜீவன் வாழ்வது மண்ணில் முடியாது...
இப்படிக்கு உன் இடது பக்கம்
வாழும் உன் இதயம்.....